தமிழ்நாடு

அதிருப்தி! பென்னிகுவிக் மணி மண்டபம் விழா ...பெரியாறு அணை குறித்த விபரங்கள் இல்லாததால்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கிற்காக மணி மண்டபம் லோயர்கேம்பில் 2013 ஜன. 15 ல் திறப்பு விழா காணப்பட்டது. இங்கு பென்னிகுவிக் சிலையும், பெரியாறு அணை குறித்த ஒரு சில படங்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால், பெரியாறு அணை கட்டிய விபரங்கள், கட்டுமானப் பணியில் ஏற்பட்ட சிரமங்கள், பணியின்போது இறந்தவர்களின் விபரங்கள் மற்றும் அணை குறித்த வரலாறு
 அதிருப்தி! பென்னிகுவிக் மணி மண்டபம் விழா ...பெரியாறு அணை குறித்த விபரங்கள் இல்லாததால்

பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கிற்காக மணி மண்டபம் லோயர்கேம்பில் 2013 ஜன. 15 ல் திறப்பு விழா காணப்பட்டது. இங்கு பென்னிகுவிக் சிலையும், பெரியாறு அணை குறித்த ஒரு சில படங்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால், பெரியாறு அணை கட்டிய விபரங்கள், கட்டுமானப் பணியில் ஏற்பட்ட சிரமங்கள், பணியின்போது இறந்தவர்களின் விபரங்கள் மற்றும் அணை குறித்த வரலாறு உள்ளிட்டவைகள் இடம் பெற வில்லை.

மணிமண்டபம் திறப்பு விழாவின் போது, விரைவில் அணை குறித்த கூடுதல் தகவல்கள் இடம் பெறும் என அறிவித்திருந்தனர். ஆனால், 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை எவ்வித கூடுதல் வசதிகளையும் செய்து தரப்படவில்லை.பிறந்தநாள் விழா:பென்னிகுவிக் ஜன. 15 ல் பிறந்தார். இவரது பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பொங்கல் விழாவாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக லோயர் கேம்ப் மணிமண்டபத்தில் விவசாயிகள் ஒன்று கூடி பொங்கல் வைத்து விழா எடுப்பார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மணிமண்டபம் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

முன்கூட்டியே திறக்க விவசாயிகள் வலியுறுத்தியபோது சீரமைப்பு பணிகள் நடப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். பொங்கல் விழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பணிகள் பெயரளவில் நடந்து வருகிறது. இது தேனி மாவட்ட விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X