கம்பம் : பிரசவங்களில் தாய் சேய் மரணமில்லாத நிலையை ஏற்படுத்த மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் பிரசவங்கள் பார்த்த நிலைமை மாறி 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் வசதிகள் கிராமங்களிலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கிராம செவிலியர்கள் தினமும் கர்ப்பிணிகளை கண்காணிக்கின்றனர். இருந்தும் பிரசவங்களில் போது, மரணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அனைத்து வசதிகள் இருந்தும் மரணம் நடக்காமல் தவிர்க்க டாக்டர்கள் முன்வர வேண்டும். வீடியோகான்பரன்ஸ் கலந்துரையாடலில் சுகாதார துறை வலியுறுத்துகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், கர்ப்பிணி தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் நிலை டாக்டர்களுக்கு நன்றாக தெரியும். முன்னெச்சரிக்கை முறைகளை பின்பற்றி, மரணமில்லா நிலையை ஏற்படுத்துவது எளிதானது. ஆனால் கணிசமான அளவில் மரணங்கள் நிகழ்கிறது. மரணமில்லா பிரசவங்கள் நடைபெறுவதை டாக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்' என அரசு வலியுறுத்துகிறது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE