தேனி : மாவட்டத்தில் சுபாஸ் பாலேக்கர் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 300 ஏக்கரில் காய்கறி,கீரை, பழங்கள், உணவு பொருட்கள் இயற்கை முறையில் ஆர்வலர்கள் சாகுபடி செய்து தேனியில் விற்பனை செய்கின்றனர்.
சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் நாட்ராயன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ முன்னிலை வகித்தார். பொருளாளர் சுரேஷ் வரவேற்றார். இயற்கை விவசாயிகள், நுகர்வோர் கலந்து கொண்டனர். இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை வார சந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் விற்பனை, விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் அங்காடி செயல்படுத்துவது. கலப்படம் இல்லாத சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கு இயற்கை வித்துக்களை சாகுபடி செய்து நாட்டு செக்கு மூலம் எண்ணெய் எடுத்து விற்பனை செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE