பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் குடிநீர் வாரிய பணியாளர்கள் தவிப்பு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
தேனி : குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வு பெற்ற 550 பேர் 2ஆண்டுகளாக பணப்பலன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 2018 ஜூன் முதல் 2020 வரை முதன்மை பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை 550 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். பதவிக்கு ஏற்ப பணிக் கொடை, கமிட்டேஷன், விடுப்பு சம்பளம், 7 வது ஊதிய குழு உயர்வு பலன்கள் என தலா ரூ.35 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை

தேனி : குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வு பெற்ற 550 பேர் 2ஆண்டுகளாக பணப்பலன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 2018 ஜூன் முதல் 2020 வரை முதன்மை பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை 550 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். பதவிக்கு ஏற்ப பணிக் கொடை, கமிட்டேஷன், விடுப்பு சம்பளம், 7 வது ஊதிய குழு உயர்வு பலன்கள் என தலா ரூ.35 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வழங்க வேண்டும். ஓய்வு பெற்று 2 ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்களை வழங்காததால் பிள்ளைகளின் திருமணம், கல்வி, மருத்துவ செலவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

வாரியத்தில் ஓய்வூதிய பலன் கேட்டால் அரசு நிதி ஒதுக்கீடு இல்லை என்கின்றனர். நிதிஒதுக்கீடு செய்தால் அதை மின் கட்டணத்திற்கும், கான்ட்ராக்டர்களுக்கு வழங்கி விடுகின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி மண்டலத்தில் 138 பேர் காத்திருக்கின்றனர். ''35 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வூதிய பலன் கிடைக்காமல் மன உளைச்சலில் உள்ளோம். அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கியது போல் குடிநீர் வாரிய ஓய்வூதியர்களுக்கு ரூ.250 கோடி ஒதுக்கி பிரச்னைக்க தீர்வு காண வேண்டும்' என ஓய்வூதிய சங்கத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X