பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகலையமுத்துாரில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
நெய்க்காரப்பட்டி : பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பழநி பெரியகலையமுத்தூரில் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல், பழநி, நத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. பழநி நெய்க்காரப்பட்டி அருகே

நெய்க்காரப்பட்டி : பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பழநி பெரியகலையமுத்தூரில் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல், பழநி, நத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. பழநி நெய்க்காரப்பட்டி அருகே பெரியகலையமுத்தூரில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. காளைகள் மட்டுமின்றி மாடுபிடி வீரர்களும் மும்மரமாக தயாராகி வருகின்றனர்.காளை வளர்க்கும் சிவா கூறியது: பரம்பரை பரம்பரையாக காளைகள் வளர்க்கிறோம். காளைகளை தெய்வமாக வழிபடுகிறோம். செல்ல பெயரும் வைத்துள்ளோம்.

தினமும் அதிவேக நடைப்பயிற்சி, மண்குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். உணவாக பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் கொடுப்போம். எங்கள் காளை ஜல்லிக்கட்டில் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X