சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடல் நலக்குறைவால் ‛ போலீசார் இறப்பு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் திடீரென உடல் நலக்குறைவால் போலீசார் இறந்ததால், அத்துறையில் பணியாற்றுவோர் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து எஸ்.ஐ., ரஞ்சித்குமார் பணியின் போது உடல்நலக் குறைவால் திடீரென இறந்தார். இந்த சோகம் மறைவதற்குள் கொடைக்கானல் போலீசில் ஏட்டாக பணிபுரிந்த ஜெயசீலன் 46, நேற்று இறந்தார்.சில தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து

கொடைக்கானல் : கொடைக்கானலில் திடீரென உடல் நலக்குறைவால் போலீசார் இறந்ததால், அத்துறையில் பணியாற்றுவோர் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து எஸ்.ஐ., ரஞ்சித்குமார் பணியின் போது உடல்நலக் குறைவால் திடீரென இறந்தார். இந்த சோகம் மறைவதற்குள் கொடைக்கானல் போலீசில் ஏட்டாக பணிபுரிந்த ஜெயசீலன் 46, நேற்று இறந்தார்.சில தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டவர் போலீஸ் குடியிருப்பில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். இரு போலீசார் தொடர்ந்து உடல்நலக்குறைவால் பலியானதால் போலீசார் மத்தியில் அச்சம், சோர்வு ஏற்பட்டுள்ளது.

டி.எஸ்.பி., ஆத்மநாதன் கூறுகையில்,''போலீசாருக்கு வாரந்தோறும் உடல்நலம் சம்பந்தமான ஆய்வு செய்யப்படுகிறது. பயிற்சிகள் வழங்கப்படுகிறது. போலீசார் மன அழுத்தமின்றி, உடல்நலத்துடன் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X