பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பொங்கல் விழாவத்தலக்குண்டு: திருநகரில் பொங்கல் விளையாட்டு விழாவில் சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், குடியிருப்போர் சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தனர். செயலாளர் நாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீதர் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ், எஸ்.ஐ.,க்கள் கலையரசன், ேஷக் பரிசுகளை வழங்கினர். பேச்சு, கோலம், ஓட்டம், நடனப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி

பொங்கல் விழாவத்தலக்குண்டு: திருநகரில் பொங்கல் விளையாட்டு விழாவில் சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், குடியிருப்போர் சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தனர். செயலாளர் நாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீதர் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ், எஸ்.ஐ.,க்கள் கலையரசன், ேஷக் பரிசுகளை வழங்கினர். பேச்சு, கோலம், ஓட்டம், நடனப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது.

கேமரா இயக்க விழாபட்டிவீரன்பட்டி: அண்ணாநகர், சாவடிபஜார், பஸ் நிறுத்தம் பகுதிகளில் ஊர்க்காவல் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சாதனை படைத்த மாணவிகளை கவுரவித்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துவங்க உதவி வழங்கும் விழா நடந்தது. தொழிலதிபர் அருண்நாகராஜ் தலைமை வகித்தார். சங்க தலைவர் பால்ராஜ் வரவேற்றார். டி.ஜ.ஜி., முத்துச்சாமி கண்காணிப்பு கேமராக்களை இயக்கி, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.பயனாளிகளுக்கு பயிற்சிவடமதுரை: ஆடு, மாடு பெறும் பயனாளிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். கால்நடை டாக்டர் அந்தோணிராஜ் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் கவுரி மஞ்சுளாதேவி, விநாயகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் பாலசுப்ரமணி பங்கேற்றனர். புத்தூர் ஊராட்சியில் 134 பேருக்கு தலா 4 ஆடுகள், சிங்காரக்கோட்டை ஊராட்சியில் 50 பேருக்கு மாடுகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

வாலிபர் தற்கொலைதிண்டுக்கல்: -நத்தம் சாலையில் உள்ள சங்கிலித்தேவனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 22. பெற்றோர் கண்டித்ததால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சாலையோர மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது வினோத்குமார் என்பது தெரிய வந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சந்தை தேதி மாற்றம் வடமதுரை: வடமதுரையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் சந்தை பொங்கல் பண்டிகைக்காக இந்த வாரம் நாளை மறுநாள் (ஜன.13) புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதே சமயம் எரியோடு சந்தை வழக்கம் போல் புதன், அய்யலுார் சந்தை வியாழன் என மாற்றம் ஏதுமின்றி நடக்கும்.

ஆலோசனை கூட்டம் குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிர்வாக குழுத் தலைவர் கருப்பணன் தலைமை வகித்தார். செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். இதில், ஜனவரி 27 ம் தேதி 48 நாள் மண்டல பூஜை, புதிய தேர் வெள்ளோட்டம், திருக்கல்யாணம் நடத்துவது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X