இஸ்லாமாபாத்: கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாக். பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் 73வது சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, ‛ இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. அதனால் பாக்., ராணுவம் அதற்கு இணையாக வலிமையை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. பாக்., பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோடியின் திறம்பட்ட ஆட்சியில் இந்திய அரசு வலிமை அடைந்திருப்பதால் பாக் ராணுவம் பலத்தை கூட்ட வேண்டும் என்று இம்ரான் தன்னுடைய அச்சத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.
காங்., ஆட்சியில் பாக் அத்துமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் மோடி அரசு பாக்., கின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பாக்., படையினை ஒடுக்க இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளது.
2016ம் ஆண்டில் உரி பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு சில நாட்களிலேயே இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 2019ம் ஆண்டு பிப்.,14 ல் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தில் மீது நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் நம் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். ஆனால் 12 நாட்களிலேயே இந்திய விமானப் படை பாலகாட் பகுதியில் குண்டு மழை பொழிந்தது. இதில் 300க்கும் அதிகமான பாக்., பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை முதலில் மறுத்து வந்த பாக்., அரசு தற்போது ஒத்துக் கொண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. பாக்., அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தில் இந்தியா உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாக்., கின் பயங்கரவாத முகத்தினை பல்வேறு யுக்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. பாக்., பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில் இந்தியா அதை நிரூபித்ததால் பாக். கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE