பொது செய்தி

இந்தியா

7 மாதங்களில் 3.3 கோடி கிலோ கொரோனா மருத்துவ கழிவுகள்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021
Share
Advertisement
புதுடில்லி : கடந்த ஏழு மாதங்களில் 3.3 கோடி கிலோ எடையிலான கொரோனா வைரஸ் சார்ந்த மருத்துவ கழிவுகள் குவிந்ததாகவும் அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.நம் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதற்கிடையே நோயாளிகளுக்கு
covid 19, corona virus, PPE kits, மருத்துவ கழிவுகள், கொரோனா

புதுடில்லி : கடந்த ஏழு மாதங்களில் 3.3 கோடி கிலோ எடையிலான கொரோனா வைரஸ் சார்ந்த மருத்துவ கழிவுகள் குவிந்ததாகவும் அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதற்கிடையே நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சையை சார்ந்த மருத்துவ கழிவுகள் குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிக்கை வெளியிட்டது:அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் கடந்த ஆண்டு பாதுகாப்பு உடைகள் 'ஷூ கவர்'கள் கையுறைகள் மனித ரத்தம் உறைந்த 'பிளாஸ்டர்'கள் ரத்தப் பைகள் ஊசிகள் என கொரோனா சிகிச்சை சார்ந்த மருத்துவ கழிவுகள் அதிக அளவில் குவிந்துள்ளன.


latest tamil news



கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையிலான ஏழு மாதங்களில் 3.3 கோடி கிலோ எடையிலான கொரோனா சார்ந்த மருத்துவ கழிவுகள் வெளியாயின.அவை நாட்டில் உள்ள 198 பொது மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக அப்புறப்படுத்தப்பட்டன.

அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 55 லட்சம் கிலோ எடையிலான கொரோனா சார்ந்த மருத்துவ கழிவுகள் வெளியாயின.நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 54 லட்சம் கிலோ எடையிலான மருத்துவ கழிவுகள் வெளியாயின. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X