புதுடில்லி: பறவைக் காய்ச்சல் பரவலால், ஏழு மாநிலஙகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மத்திய கால்நடைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கேரளாவில் தான், பறவைக் காய்ச்சல் முதலில் பரவ துவங்கியது. தற்போது, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து, நீர்நீலைகள், உயிருள்ள பறவைகள் விற்பனை சந்தை, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை புதைக்கும் இடங்கள் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.டில்லி, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துஉள்ளதா என, பரிசோதிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கிடையில், காஜிப்பூர் மார்கெட்டில், கோழிப்பண்ணைக்கு, டில்லி அரசு, 'சீல்' வைத்துள்ளது.
பறவைகளை கொல்ல முடிவுஉத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த காட்டுக் கோழிகள், சில நாட்களுக்கு முன் இறந்து கிடந்தன. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இவை இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள, காட்டுக் கோழிகள், கிளிகளை, கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், வாத்துக்கள் மற்றும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை கொல்லவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.உயிரியல் பூங்காவை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு, இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE