பொது செய்தி

இந்தியா

எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை திருவாபரண பவனி புறப்படுகிறது. ஜன.14 காலையில் மகர சங்கரம பூஜை நடக்கிறது.ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் எருமேலி பேட்டை துள்ளலில் தற்போது 50 பேர் மட்டும் கொரோனாநெகட்டிவ் சான்றிதழுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை திருவாபரண பவனி புறப்படுகிறது. ஜன.14 காலையில் மகர சங்கரம பூஜை நடக்கிறது.

ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் எருமேலி பேட்டை துள்ளலில் தற்போது 50 பேர் மட்டும் கொரோனாநெகட்டிவ் சான்றிதழுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர் எருமேலி வந்துள்ளனர்.நாளை மதியம் 12:30 மணிக்கு பந்தளத்தில் இருந்து திருவாபரணங்கள் புறப்படுகிறது. பந்தளம் கோயிக்கல் சாஸ்தா கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின்னர் திருவாபரண பெட்டிகள் தலையில் சுமந்து வரப்படும்.

இதிலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழியில் எங்கும் வரவேற்பு கிடையாது.ஜன.14 மாலையில் பவனி சன்னிதானம் வந்தடையும். அன்று மகரஜோதி பெருவிழா நடக்கிறது. அன்று சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் காலை 8:14 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெறும்.

இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்படும் நெய்தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டு அந்த நெய் தேங்காய் மூடியில் பிரசாதமாக வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X