பொது செய்தி

தமிழ்நாடு

வடுகபட்டி ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் : கலெக்டர், எஸ்.பி., மரியாதை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் ஆறுமுகம் 38,ஜம்மு- காஷ்மீரில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டு முழங்க சொந்த ஊரான வடுகபட்டியில் தகனம் செய்யப்பட்டது.வடுகபட்டி தெலுங்கர் தெருவைச் சேர்ந்த குருசாமி, முத்துலட்சுமிமகன் ஆறுமுகம், 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரியாற்றி

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் ஆறுமுகம் 38,ஜம்மு- காஷ்மீரில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் 21 குண்டு முழங்க சொந்த ஊரான வடுகபட்டியில் தகனம் செய்யப்பட்டது.வடுகபட்டி தெலுங்கர் தெருவைச் சேர்ந்த குருசாமி, முத்துலட்சுமிமகன் ஆறுமுகம், 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரியாற்றி வந்தார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நாயக் பணியில் இருந்த போது தீ விபத்தில் படுகாயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம் ஜன., 8 ல் வீரமரணமடைந்தார்.

அவரது உடல் கோவைக்கு விமானம் மூலமும்கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராணுவ வாகனத்தில் நேற்று காலை 4:30 மணிக்கு வடுகபட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சுபைதார் ராஜ்பாரத் மற்றும் 15 ராணுவவீரர்கள் ஆறுமுகம் உடலுக்கு தேசியக்கொடி அணிவித்து உறவினர்களிடம் ஒப்பைடத்தனர்.திருச்சி பட்டாலியன் கேப்டன் அக்ஷய் பஞ்ச் மரியாதை செலுத்தினார்.சுபைதார் முருகானந்தம் தலைமையில் 24 ராணுவவீர்கள் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.ஆறுமுகத்தின் தாயார்,மனைவி பாண்டிராணி 32, மகள் ஜெயஸ்ரீ 12, மகன் பாலசபரிகுரு 7, உறவினர்கள்,நண்பர்கள் கதறி அழுதனர். வீட்டிலிருந்து சுடுகாடு வரை ராணுவவாகனத்தில்உடல் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் இருபுறங்களிலும் நின்று மலர்களைத் துாவிமரியாதை செலுத்தினர்.

சுடுகாட்டில் கலெக்டர் பல்லவிபல்தேவ், சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., சப்-கலெக்டர் சினேகா, கட்சியினர், ஊர்மக்கள் மரியாதை செலுத்தினர்.ராணுவமரியாதை: மகன் பாலசபரிகுரு இறுதிசடங்கு செய்தார். காலை 9:40 மணிக்கு ஆறுமுகம் உடல்தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகளை சுட்டு மரியாதை செலுத்தினர்.

தேசியக்கொடி ஒப்படைப்பு: உடலில் போர்த்தியிருந்த தேசியக்கொடியை, கேப்டன் அக் ஷய் பஞ்ச், ஆறுமுகத்தின் மனைவி பாண்டிராணியிடம் ஒப்படைத்தார். ஆறுமுகம் குடும்பத்தினர் அரசு வேலை,உதவிகள் செய்திட கோரினர். அரசு உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் ஆறுதல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X