அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டத்தை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: சினிமா இயக்குனர் பேரரசு பேச்சு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
வடமதுரை: 'வேளாண் சட்டத்தை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்'என, பா.ஜ., மாநில கலை, இலக்கிய அணி செயலாளரும் சினிமா இயக்குனருமான பேரரசு பேசினார்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பா.ஜ.,வின் ''நம்ம ஊரு பொங்கல் திருவிழா''வில் அவர் பேசியது: எல்லா மதத்தினரும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ., சொல்கிறது. தமிழ், தமிழர் என கூக்குரலிடும் கட்சிகள் இவ்வாறு

வடமதுரை: 'வேளாண் சட்டத்தை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்'என, பா.ஜ., மாநில கலை, இலக்கிய அணி செயலாளரும் சினிமா இயக்குனருமான பேரரசு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பா.ஜ.,வின் ''நம்ம ஊரு பொங்கல் திருவிழா''வில் அவர் பேசியது: எல்லா மதத்தினரும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ., சொல்கிறது. தமிழ், தமிழர் என கூக்குரலிடும் கட்சிகள் இவ்வாறு அழைப்பதில்லை. மதசார்பின்மை பேசும் கட்சிகள் ஹிந்துக்களை இளிச்சவாயர்களாக கருதுகின்றன.ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும் இழிவாக பேசினால் மற்ற மதத்தினர் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளலாம் என கருதியே இவ்வாறு செயல்படுகின்றன.

மற்ற மதங்களில் இருக்கும் ஒற்றுமை ஹிந்துக்களிடம் இல்லை என்பதை இந்த கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. புரோக்கர்கள் இடையூறின்றி விவசாயிகள் அதிக பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம், இவ்வாறு அவர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X