ராஜபாளையம்: கொரோன தடுப் பூசிகளை சம்பந்தப் பட்டவரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே ஊசியை செலுத்த வேண்டும் என்பதுட்பட கோரிக்கைளை வலி யுறுத்தி பிப்.2ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில தலைவர் நிர்மலா தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சங்க மாநில தலைவர் நிர்மலா கூறியதாவது: கொரோனா தடுப்பூசி மருந்தை முன்கள சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவதில் அவசரம் காட்டக்கூடாது. அதன் பக்க விளைவுகள் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. மூன்றாவது கட்ட பரிசோதனை முற்றுப் பெறவில்லை. மினி கிளினிக்குகளை புதிய கட்டடங்களில் செயல்படுத்த வேண்டும்.கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி பிப்.,2ல் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE