நாகர்கோவில்: நாகர்கோவிலில் தன்னை கொல்ல சதி நடப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் கதறியவர், வீட்டு மாடியில் இருந்து குதித்து இறந்தார்.
நாகர்கோவில் பூங்கா நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மூத்த மகன் ஜெய்சன். பல் டாக்டர். இளைய மகன் ஜேக்கப் 27. பாலிடெக்னிக் படித்திருந்த இவருக்கு லேசான மனநல பாதிப்பு ஏற்பட்டிருந்தது.தன்னை யாரோ கொல்ல வருவது போல் சத்தம் போடுவது வாடிக்கை.சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்த இவர், சொத்துக்காக தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், காப்பாற்றும் படியும் போலீஸ் அதிகாரிகள் காலில் விழுந்து கதறினார்.
குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜேக்கப், தன்னை யாரோ கொல்ல வருகிறார்கள் என்று கூறிய படி தாய் ஷாலினியை கத்தியால் குத்தி விட்டு மாடிக்கு ஓடினார். பின்னால் சென்ற தந்தையையும் தாக்கி விட்டு மாடியில் இருந்து குதித்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE