பொது செய்தி

இந்தியா

பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வலியுறுத்துவேன். மற்ற கட்சிகளை விட, பா.ஜ.,வில் அதிகளவில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். பிரதமர் மோடியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.- நடிகை குஷ்பு'பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு பேச்சுமத்திய அரசு, மக்களுக்காக
பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...

தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வலியுறுத்துவேன். மற்ற கட்சிகளை விட, பா.ஜ.,வில் அதிகளவில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். பிரதமர் மோடியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
- நடிகை குஷ்பு


'பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு பேச்சுமத்திய அரசு, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நம் மாநிலத்தில் பலரும், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இருக்க வேண்டும் என்பது, என் விருப்பமாகவும் இருக்கிறது.
- பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராதாரவி


'டீசன்டான கட்சி; பெண்கள், படித்தவர்கள் அதிகம் உள்ள கட்சி; போட்டி, பொறாமை குறைந்த கட்சி என்றல்லவா பலரும் அதில் இணைந்து வருகின்றனர்...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராதாரவி பேட்டிதமிழர் கடவுள் முருகப்பெருமானின் மிகப்பெரிய திருவிழாவான தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என, வேல் யாத்திரையின்போது தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி.
- மாநில பா.ஜ., தலைவர் முருகன்


'அப்போ, ஒவ்வொரு மாதமும் வரும், கிருத்திகைக்கும் அரசு விடுமுறை கேட்டுப் பாருங்களேன்...' என, நக்கலாக கூறத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் முருகன் பேட்டிதமிழகத்தில், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகளை பெற்றுள்ளதை சாதனையாக கூறும் தமிழக முதல்வர், புதிய மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டிலேயே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்


latest tamil news
'ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்க வேண்டாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை.யாழ்ப்பாணத்தில், இலங்கை அரசால் இடித்து தள்ளப்பட்ட முள்ளி வாய்க்கால் கோரத் தாண்டவத்தைக் கண்டு, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதற்கென ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். அவருக்கு என் ஆதரவு உண்டு.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'அவர் போராடுவதும், நீங்கள் ஆதரவு கொடுப்பதும், தமிழகம் இதுவரை காணாததா என்ன...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.கொத்துக் கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது; வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?
- நடிகர் கமல்ஹாசன்


'இலங்கைக்கு வரவழைத்து, பரிசுகள் கொடுத்து, நினைவுகளை மழுங்க, இலங்கை அரசு அடித்து விடும்...' என, பழசை நினைவுபடுத்தும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-ஜன-202119:59:06 IST Report Abuse
bal நீங்கள் லட்சம் கோடியாக கட்சி மாறினீங்க...அவங்க நூறு இருநூறுக்கு கூட்டத்துக்கு வராங்க...அவ்வளவுதான்.
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
11-ஜன-202116:15:03 IST Report Abuse
வால்டர் "நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?" - அப்போ கடைசி வரைக்கும் நீங்க வசனம் மட்டும்தான் பேசுவீங்க. செயலில் எப்போது இறங்குவீர்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத்தெளிவாக விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்பதை நான் மட்டும் கேட்கவில்லை தங்களது பரப்புரையை கேட்கும் உங்கள் ரசிகர்கள் மட்டுமேயன்றி ஊடக அன்பர்கள், சமூகவலைத்தள விரும்பிகள், மீம் கிரியேட்டர்கள் இவ்வாறு நான் சொல்லி கொண்டே செல்லலாம். இதை எல்லாம் நீங்கள் மக்களுக்கு சொல்லும்போது ஊடக நண்பர்கள் அதை அப்படியே எந்தவித கலப்பும் இல்லாமல் வெளியிட வேண்டும் அதுதான் நீதி அதுதான் நேர்மை மற்றும் ஊடக தர்மமும் கூட. இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வதைவிட எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். என்ன சொல்றீங்க.
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
11-ஜன-202115:55:40 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . 'டீசன்டான கட்சி பெண்கள், படித்தவர்கள் அதிகம் உள்ள கட்சி போட்டி, பொறாமை குறைந்த கட்சி என்றல்லவா பலரும் அதில் இணைந்து வருகின்றனர்...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராதாரவி பேட்டி..... இதெல்லாம் எச் ராஜாவுக்கு தெரியுமா ?? உயர் நீதி மன்றமாவது .. ஏதோவாவது சொன்னாரே ? தமிழகத்தில் அண்ணாமலை போன்ற புதிய தலைவர்கள் வந்தால்தான் பாஜக ஒரு சீட்டாவது மலரும் .. எச் ராஜா போன்றவர்களின் பேச்சால் அந்த ஒரு சீட்டும் மலராது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X