பஸ் ஊழியர் காத்திருப்பு போராட்டம் வாபஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

Added : ஜன 11, 2021
Share
சென்னை : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தத்தை தேர்தலுக்குள் நிறைவேற்ற வேண்டும். நிதி சாராத கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கூட்டமைப்பின்

சென்னை : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தத்தை தேர்தலுக்குள் நிறைவேற்ற வேண்டும். நிதி சாராத கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கூட்டமைப்பின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, உடனடியாக முடிவெடுப்பதாக, போக்குவரத்து துறை செயலர் உறுதி அளித்துள்ளார். அதனால், காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X