வாஷிங்டன் : அமெரிக்கா - தைவான் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நேற்று தளர்த்தியது.
அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தென்சீன கடல் பகுதியில் அத்துமீறல் உய்குர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகிறது. இதற்கிடையே தைவானை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர சீன அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சீனாவிடம் இருந்து தப்பிக்க அமெரிக்காவுடன் தைவான் அரசு நட்பு பாராட்டி வருகிறது.
கடந்த ஆகஸ்டில் அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் அலெக்ஸ் அசார் தைவானுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றார். அந்த பயணத்திற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் அமெரிக்க - தைவான் துாதர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நேற்று தளர்த்தியது. இந்த நடவடிக்கை சீனாவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE