சென்னை : 'அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாய விரோத வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிர பிரசாரங்களை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் மற்றும் ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செயற்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, துணைத் தலைவர்கள் நாசே ராமச்சந்திரன், தணிகாசலம் மற்றும் சிதம்பரம் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்கவில்லை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE