ஈரோடு: கொரோனா தடுப்பு பணி, கடந்த, 2020 மார்ச் முதல், நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன்படி, ஈரோடு மாநகராட்சியில், தூய்மை பணியாளர் முதல் அதிகாரிகள் வரை, களப்பணியாற்றினர். தினமும் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுதல், குப்பை அகற்றம், சாக்கடை தூர் எடுத்தல், மூலிகை சாறு வழங்குதல், காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. தற்போது, தளர்வுக்கு பிறகு அனைத்து பணிகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. இதனால், டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனா பரவல் தொடங்கிய மார்ச் மாதம் தொடங்கி, மாநகரில் இதுவரை, 100 டன் அளவுக்கு பிளீச்சிங் பவுடர், 60 வார்டுகளில் தூவப்பட்டுள்ளது. ஐப்போ, லைசால் கரைசல் கிருமி நாசினி மருந்து, நான்கு லட்சம் லிட்டர் அளவுக்கு தெளிக்கப்பட்டுள்ளது. ?,??? லோடு அளவுக்கு சாக்கடை மண் எடுக்கப்பட்டது. கடந்த, 2019 டிச., மாதம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு, 65 பேருக்கு இருந்தது. நடப்பாண்டு இரண்டு பேருக்கு மட்டுமே இருந்தது. அதுவும் வெளியூரில் இருந்து வந்தவர்கள். இதற்கு காரணம், தொடர்ந்து கொரோனா கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE