ஈரோடு: கொ.ம.தே.க., ஈரோடு மேற்கு, மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோடு அருகே மேட்டுக்கடையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மலைச்சாமி தலைமையில், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில பொருளாளர் பாலு, இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு ஈஸ்வரன் கூறியதாவது: கொ.ம.தே.க., வலிமையை, எங்களின் கூட்டணி தலைமை புரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பேச இன்னும் காலம் உள்ளது. பா.ஜ.., அழுத்தம் காரணமாக, வேளாளர் என்ற பெயரை சில சாதிகளுக்கு கொடுப்பதற்கு, முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது ரசிகர்களே முடிவு செய்து விட்டனர். அவர் குறித்து பேச ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE