வேளாண் சட்டம்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்விக்கணை !

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு

புதுடில்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.



latest tamil news



மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் பல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதி பாப்டே கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்தை அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது. நிலைமை மோசமாக உள்ளது. என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. வேளாண் சட்டங்களை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க முடியுமா? போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தற்கொலை செய்துள்ளனர். முதியவர்கள், பெண்களும், போராட்ட களத்தில் உள்ளனர். என்ன நடக்கிறது. வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

சட்டத்தை அமல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம். ஆனால், அதே இடத்தில் போராட்டம் தொடர வேண்டுமா என்பது தான் முக்கிய கேள்வி.போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. யாரின் கைகளிலும் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு விரும்பாவிட்டால், நாங்கள், சட்டத்தை நிறுத்தி வைப்போம்.


latest tamil news





ரத்தக்கறை படியக்கூடாது


வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என தெரியவில்லை. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.தற்போதைய பிரச்னைக்கு மத்திய அரசு தான் பொறுப்பு. சட்டத்தை நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள். இதனை நீங்கள் சிறந்த முறையில் செய்திருக்கலாம் .இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.


தடை விதிக்க முடியாது


மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், சட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என, முந்தைய காலங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வடிவங்கள் முழுமை பெறாமலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருக்கும் சட்டங்களை தான் நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும். இல்லாவிட்டால், சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது.ஹரியானா முதல்வருக்கு நடந்ததை போன்று மீண்டும் நடைபெறக்கூடாது. வரும் 26ம் தேதியன்று குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில், டிராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.




குரல் ஓட்டெடுப்பு ஏன்


விவசாய சங்கம் சார்பில் ஆஜரான துஷ்யந்த் தவே கூறுகையில், ராம்லீலா மைதானத்திற்கு செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். எந்த வன்முறையிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. முக்கிய சட்டமான வேளாண் சட்டங்களை, மத்திய அரசு எப்படி பார்லிமென்டில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற முடியும். இதில் அரசு முக்கியமானதாக கருதியிருந்தால், பார்லி கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கலாம். ஆனால், அரசு ஏன் பயந்து பின்வாங்குகிறது என தெரிவித்தார்.




யார் பொறுப்பு

தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், இந்த பிரச்னையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. நாங்கள் சில நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு வேளாண் சட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க முடியுமா? இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாள்கிறது என நாங்கள் நினைக்கவில்லை. இது முக்கியமான விஷயம் என்பதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.போராட்டத்திற்கு எதிராக நாங்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை. போராட்டம் தொடரட்டும். ஆனால், அதற்கு யார் பொறுப்பேற்று கொள்ள போகிறார்கள்? பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதற்காக தான், சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
12-ஜன-202100:42:33 IST Report Abuse
Murthy அரசு தவறான வழியில் செல்லும்போது நீதிமன்றங்கள் தலையிட்டுதான் ஆகவேண்டும்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202122:18:10 IST Report Abuse
அறவோன் இந்த கூட்டம் தொட்ட அனைத்துமே டஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஸுதான்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202122:15:53 IST Report Abuse
அறவோன் சட்ட திருத்தம் செய்ய அறிவுறுத்தி, இன்னும் சில காலம் உச்சநீதிமன்றமே நாட்டை ஆளவேண்டும் பிறகு தேர்தல் நடத்தலாம் 👍👍👍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X