ஈரோடு: நோய் கொடுமை தாளாமல், பெண் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு, கே.கே.நகர், தெற்கு கிராஸ் முதல் வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். ஓய்வு பெற்ற திருச்சி பெல் நிறுவன ஊழியர். இவரின் மனைவி புனிதவதி, 57; இவர்களின் மகள் சசிதா. சென்னையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாக உள்ளார். மகன் அபிலேஷ், பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பழநியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு, கடந்த, 7ம் தேதி ஞானசேகரன் சென்று விட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்தார். வெகு நேரம் தட்டியும் திறக்கப்படாத நிலையில், லேசாக தள்ளியபோது கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்றபோது மின் விசிறியில், சேலையில் தூக்கிட்ட நிலையில் புனிதவதி சடலமாக தொங்கினார். உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. தாலுகா போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சரவாங்கி நோயால் அவதிப்பட்ட புனிதவதி, கணவர் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு நாட்களுக்கு முன் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE