புதுச்சேரி : நடிகை நயன்தாராவின் காலில் உதயநிதி விழுந்தது ஏன் என அன்பழகன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் அ.தி.மு.க. கிழக்கு மாநிலம் சார்பில், தி.மு.க. உதயநிதியை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில், அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது;
அரசியல் தலைவர்களுக்கு முதலில் பேச்சு, நடத்தையில் நாகரீகம் வேண்டும். ஆனால் வாரிசு அரசியல் தலைவர் உதயநிதிக்கு பேச்சும், பண்பும் இல்லை.தந்தையை போன்றே மகனும் தரம் தாழ்ந்து பேசுகிறார். ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க., எனவே, ஊழல் செய்ததாக அ.தி.மு.க., அமைச்சர்களை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி தி.மு.க.,வுக்கு இல்லை.மக்கள் நலனுக்காக பாடுபடும் தமிழக முதல்வர் பற்றி பேச ஸ்டாலின், அவரது மகன் உதயநிதிக்கு தகுதியில்லை. தன்னோடு நடித்த நயன்தாராவின் காலில் உதயநிதி விழுந்தது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோல் பேசினால், உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, அ.தி.மு.க., முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE