சேலம்: வியாபாரிகளிடம், அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதற்கு, தேர்தல் கமிஷன் நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில், மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கத்தின், ஒன்பதாவது பொதுக்குழு கூட்டம் தலைவர் சந்திரகாசன், செயலாளர் ஸ்ரீராமுலு, பொருளாளர் ஹரிபாஸ்கர் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில், எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்யும் போது, கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்ற, மத்திய அரசின் உத்தரவை வரவேற்கிறோம். இதேபோல், தமிழக அரசு மார்க்கெட்டிங் கமிட்டி மூலம், கொள்முதல் செய்யும் எண்ணெய் வித்துக்களுக்கு செஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில், வணிகர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷன், வர்த்தக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, முறையான நடைமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், மேல் முறையீடு செய்ய ஏதுவாக, சேலம் மாவட்டத்தில் மேல்முறையீட்டு ஆணையத்தை, மாநில அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE