பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, பதிணெண் சித்தர் பீடம் மற்றும் ஹிந்து வேத மறு மலர்ச்சி இயக்கம் சார்பில், பூசாரிகளுக்கு தமிழ் வழி வேத பாட பயிற்சி முகாம் நடக்கிறது. இது குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழின குருபீடம், 12வது பீடாபதிபதி அரசயோகிக்கருவூறார் தலைமையில் செயல்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான, வாழ்வியல் சடங்குகள் தமிழ் முறைப்படி கற்று தரப்படுகிறது. ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஞாயிறுதோறும், 10 வாரங்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இரண்டாவது வாரமாக, 56 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE