சேலத்தில் பெண்களுக்கு இலவச தையல் வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் பெண்களுக்கு இலவச தையல் வகுப்பு

Added : ஜன 11, 2021
Share
சேலம்: சேலம், குகை, சிட்ரா விசைத்தறி பணி மையத்தில், மகளிருக்கான இரண்டு மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில், 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்கள், வேலை வாய்ப்பு தேடும் பெண்கள் கலந்து கொள்ளலாம். பவர் தையல் இயந்திரம் இயக்குதல், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பயற்சி

சேலம்: சேலம், குகை, சிட்ரா விசைத்தறி பணி மையத்தில், மகளிருக்கான இரண்டு மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில், 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்கள், வேலை வாய்ப்பு தேடும் பெண்கள் கலந்து கொள்ளலாம். பவர் தையல் இயந்திரம் இயக்குதல், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பயற்சி அளிக்கப்படும். காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கும். கல்விச்சான்று, ஆதார் அட்டை, ஜாதிசான்று, மார்பளவு புகைப்படத்துடன், இம்மாதம், 18க்குள் சிட்ரா விசைத்தறி பணி மையம், 477/158, திருச்சி பிரதான சாலை, குகை, சேலம்- 6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல் பெற, 94456-89787, 70106-16409 என்ற எண்ணில் பேசலாம். இத்தகவலை, பணி மைய பொறுப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X