மேச்சேரி: பொங்கல் பண்டிகை வரை, மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என, சாமந்தி பூ சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகின்றனர்.
மேச்சேரி, வெள்ளாறு, தொப்பூர், கூணான்டியூர், கீரைக்காரனூர் பகுதியில், 200 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். பண்டிகை, முகூர்த்த காலங்களில் மட்டுமே சாமந்தி பூக்கள் விலை, பல மடங்கு உயரும். இதர நாட்களில், பூக்கள் விலை சரிந்து விடும். ஒரு வாரமாக சமாந்தி பூக்களை வியாபாரிகள் கிலோ, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை கொள்முதல் செய்தனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நேற்று சாமந்தி பூக்களை வியபாரிகள் ஒரு கிலோ குறைந்தபட்சம், 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். வரும் நாட்களில், பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும். இதனால், கடந்த இரு நாட்களாக, பூக்கள் அறுவடையை தீவிரப்படுத்தியுள்ள விவசாயிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை வரை, சாமந்தி பூக்கள் விலை அதிகரிக்கும். மழை வந்து விட்டால் பூக்கள் அழுகி விடுவது மட்டுமின்றி, கொள்முதல் செய்வதை குறைத்து விடுவர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே, பொங்கல் வரையாவது மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE