வீரபாண்டி: ஆங்கில புத்தாண்டின், முதல் பிரதோஷமான நேற்று, கரபுரநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஆங்கில புத்தாண்டின் முதல் பிரதோஷம் வந்ததை தொடர்ந்து, காலையில் பக்தர்கள் யாருமின்றி, நந்தியம்பெருமான் மற்றும் மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பல வண்ண மலர் மாலைகள் மற்றும் சர்வ அலங்காரத்தில் நந்தியம்பதி, பெரியநாயகி சமேத கரபுரநாதர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பிரதோஷ விழாவில், ரிஷப வாகனத்தில், சுவாமி கோவில் உலா வலம் வருவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 10 மாதங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில், சென்னகிரி வட்டமலை காலனி மருந்தீசர் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE