சேலம்: ரேஷன் கடைகளில், இலவச வேட்டி, சேலை வரும், 31 வரை வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் ராமன் கூறினார். சேலம் மாவட்டத்தில், 1,583 ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த, 4 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 10 லட்சத்து, 12 ஆயிரத்து, 204 குடும்ப அட்டைதாரர்களில், நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, ஒன்பது லட்சத்து, 76 ஆயிரத்து, 986 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது, 96.52 சதவீதம். இன்னும், 35 ஆயிரத்து, 218 பேர் வாங்கவில்லை. நாளை மற்றும், 13 என இரு நாட்கள் மட்டும் அவகாசம் இருப்பதால், நுகர்வோர், உடனடியாக பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு கிடைக்காதவர்கள், 9445000222; 8220308836 என்ற மொபைல் எண்ணுக்கு பேசலாம். இதுகுறித்து, கலெக்டர் ராமன் கூறியதாவது: ஊர்ப்புற பகுதியில், பொங்கல் பரிசுடன், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. நகர்பகுதியில், வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசு வினியோகம் முடிந்ததும், நகர்பகுதி ரேஷன் கடைகளில், இம்மாதம் முழுவதும், இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE