பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்'

Added : ஜன 11, 2021
Share
Advertisement
ஓமலூர்: 'விமானம் பாதுகாப்பு கருதி, டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்' என, சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மறுநாள் (ஜன.,13) போகி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, பொதுமக்கள் எரிக்க வேண்டாம். அதிலிருந்து வெளியேறும்

ஓமலூர்: 'விமானம் பாதுகாப்பு கருதி, டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்' என, சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மறுநாள் (ஜன.,13) போகி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, பொதுமக்கள் எரிக்க வேண்டாம். அதிலிருந்து வெளியேறும் கரும்புகையினால், விமானம் தரையிறங்குவது, மேலேயேறுவதில் சிரமம் ஏற்படும். தற்போது, கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால், கரும்புகையினால் விமானத்தை இயக்குவது கடினமாகும். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X