பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு; விக்ரமராஜா

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சேலம்: ''வியாபாரிகளின் கோரிக்கைகளை, நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கு, ஆதரவு வழங்கப்படும்,'' என, சேலத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில், வியாபாரிகள் செலுத்த வேண்டிய கடைகளுக்கான வாடகையை, தமிழக அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். லைசென்ஸ் எடுக்க, 2,000 ரூபாய்

சேலம்: ''வியாபாரிகளின் கோரிக்கைகளை, நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கு, ஆதரவு வழங்கப்படும்,'' என, சேலத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில், வியாபாரிகள் செலுத்த வேண்டிய கடைகளுக்கான வாடகையை, தமிழக அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். லைசென்ஸ் எடுக்க, 2,000 ரூபாய் ஆன்லைனில் செலுத்த விதிகள் உள்ள நிலையில், 5,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே சட்டம், ஒரே விதி என சொல்லும் மத்திய அரசு, வியாபாரிகள் வரி செலுத்துவதையும் ஒருங்கிணைத்து, ஒரு வரி செலுத்தினால் போதும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் தடை செய்தல், உணவு பாதுகாப்பு சட்ட விதிகள், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, உறுதி அளிக்கும் கட்சிக்கு, வரும் சட்டசபை தேர்தலில், ஐந்து லட்சம் வியாபாரிகள், அவர்களின் குடும்பத்தினர் ஆதரவு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X