வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து, இன்று, ஆறு மற்றும் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புழுதிக்குட்டை அணையில் இருந்து, பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆறு மற்றும் கால்வாய் பாசனத்துக்கு, 31 நாட்களுக்கு, மொத்தம், 147.67 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில், வசிஷ்ட நதி ஆற்று பாசனத்துக்கு, 82.87 மில்லியன் கன அடி வீதம், மொத்தம், 16 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் கால்வாய் பாசனத்துக்கு, 64.80 மில்லியன் கன அடி வீதம், மொத்தம், 15 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE