சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இரிடியம்' தருவதாக 3 பேர் கடத்தல் : சத்தியமங்கலம் அருகே 9 பேர் கைது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம் : 'இரிடியம்' தருவதாக கூறி மூன்று பேரை கடத்தி 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.'இரிடியம்' என்பது அரிதான ஒரு உலோகம். இதை 4500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். 1 கிலோ இரிடியம் கள்ளச் சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.பண்டைய கோவில் கோபுர கலசங்களில் இரிடியம் தாமிரம்
 'இரிடியம்' தருவதாக 3 பேர் கடத்தல் : சத்தியமங்கலம் அருகே 9 பேர் கைது

சத்தியமங்கலம் : 'இரிடியம்' தருவதாக கூறி மூன்று பேரை கடத்தி 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

'இரிடியம்' என்பது அரிதான ஒரு உலோகம். இதை 4500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். 1 கிலோ இரிடியம் கள்ளச் சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.பண்டைய கோவில் கோபுர கலசங்களில் இரிடியம் தாமிரம் கலந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே தமிழக கோவில்களில் கோபுர கலசங்களை மட்டும் சிலர் திருடி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன் 47; பழமை வாய்ந்த பொருட்கள் மற்றும் மீன் வலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு விற்பனை செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்தவர் ரகுமான் 40. இவர் சில நாட்களுக்கு முன் மோகனை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இரிடியம் இருப்பதாக தெரிவித்து பண்ணாரி அம்மன் கோவில் அருகே வருமாறு தெரிவித்தார்.7ம் தேதி மோகன் அவரது கார் டிரைவர் சுரேஷ் கோல்கட்டாவைச் சேர்ந்த ஜாய் ஆகியோர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்து ரகுமானை தொடர்பு கொண்டனர்.
அப்போது ஒரு காரில் போலீஸ் வேடத்தில் வந்த ஆறு பேர் காருடன் மூவரையும் கடத்திச் சென்றனர். அதே பகுதியில் காந்தி நகர் என்ற இடத்தில் ஒரு தோட்ட வீட்டில் அடைத்து வைத்தனர்.சென்னையில் உள்ள மோகன் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் 'கணவனை கடத்தி வைத்துள்ளோம்; உயிருடன் வேண்டும் என்றால் 5 கோடி ரூபாய் தர வேண்டும்' என மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் இல்லை என்றதால் 35 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.பணத்தை தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறவே 21 லட்சம் ரூபாயை வித்யா செலுத்தியுள்ளார். அதன்பின்னும் கணவரை விடுவிக்காததால் 9ம் தேதி சத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வித்யா புகார் அளித்தார்.
சத்தி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.காந்தி நகரில் விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது ஆறு பேர் தப்பி ஓடினர். ஒன்பது பேர் சிக்கினர். மோகன் உள்ளிட்ட மூவரும் மீட்கப்பட்டனர்.கும்பலிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் 16 சவரன் நகை நான்கு மொபைல் போன் 3 கார் இரிடியம் உலோகத்தை பரிசோதிக்க பயன்படுத்துவதாக கூறப்படும் ரசாயன பொருள் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தப்பிய ரகுமான் ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X