பொது செய்தி

இந்தியா

பெங்களூரின் மார்க்கெட்டுகள், களைகட்டியுள்ளது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பெங்களூரு: பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பெங்களூரின் மார்க்கெட்டுகள், களைகட்டியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பீதியால், மார்க்கெட்டுகளுக்கு வர, மக்கள் தயங்குவதால், வியாபாரம் சூடுப்பிடிக்கவில்லை.ஜன., 14ல் பொங்கல் பண்டிகை வருகிறது. பண்டிகைக்கு தேவையான கரும்பு, அவரைக்காய், கடலைக்காய், எள், வெல்லம் கலவை, சர்க்கரை அச்சுகள் என, அனைத்து பொருட்களும் மார்க்கெட்டில்

பெங்களூரு: பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பெங்களூரின் மார்க்கெட்டுகள், களைகட்டியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பீதியால், மார்க்கெட்டுகளுக்கு வர, மக்கள் தயங்குவதால், வியாபாரம் சூடுப்பிடிக்கவில்லை.

ஜன., 14ல் பொங்கல் பண்டிகை வருகிறது. பண்டிகைக்கு தேவையான கரும்பு, அவரைக்காய், கடலைக்காய், எள், வெல்லம் கலவை, சர்க்கரை அச்சுகள் என, அனைத்து பொருட்களும் மார்க்கெட்டில் குவிந்துள்ளது.எதிர்ப்பார்த்த அளவில் மக்கள் வராததால், மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சில இடங்களில் சாதாரணமாக வியாபாரம் நடக்கிறது.இதற்கு முன் பொங்கல் பண்டிகைக்கு, ஒரு மாதத்துக்கு முன்பே, வியாபாரம் களை கட்டும். எள், வெல்லம் அமோகமாக வியாபாரம் நடக்கும். ஆனால் கொரோனா தொற்று பீதியால், மார்க்கெட்டுகளுக்கு வர, மக்கள் தயங்குவதால், இம்முறை, இன்னும் சூடுப்பிடிக்கவில்லை.

பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட், ஜெயநகர், காந்தி பஜார், மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், ராஜாஜி நகர், கெங்கேரி, மடிவாளா உட்பட, பல இடங்களில் எள், வெல்லம், சர்க்கரை அச்சுகள் விற்பனைக்காகவே, தனித்தனி கடைகள் திறக்கப்பட்டுள்ளது.மளிகைக்கடைகளிலும், விற்கப்படுகிறது என்றாலும், பழையபடி வியாபாரம் இல்லை. பண்டிகைக்கு இரண்டொரு நாட்களுக்கு முன், வியாபாரம் அதிகரிக்கலாம் என, வியாபாரிகள் நம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X