பொது செய்தி

இந்தியா

குப்பைத்தொட்டியான வீட்டு மனைகள் புதுப்பொலிவு: தோட்டம் அமைக்க மாநகராட்சி உதவி

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பெங்களூரு: குப்பை தொட்டிகளாக காட்சியளிக்கும் காலியிடங்கள், வீட்டுமனைகள் பொது மக்களின் கை வண்ணத்தில், அழகான தோட்டங்களாக மாற உள்ளன. இத்திட்டத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி, தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. ஒரு காலத்தில், பச்சைப்பசேர் என வயல், தோட்டங்கள் நிறைந்து, பசுமையாக காணப்பட்ட பெங்களூரு, தற்போது காங்கிரீட் மயமாக மாறியுள்ளது. வானுயர்ந்த கட்டடங்கள் தலை
குப்பைத்தொட்டியான வீட்டு மனைகள் புதுப்பொலிவு: தோட்டம் அமைக்க மாநகராட்சி உதவி

பெங்களூரு: குப்பை தொட்டிகளாக காட்சியளிக்கும் காலியிடங்கள், வீட்டுமனைகள் பொது மக்களின் கை வண்ணத்தில், அழகான தோட்டங்களாக மாற உள்ளன. இத்திட்டத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி, தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.

ஒரு காலத்தில், பச்சைப்பசேர் என வயல், தோட்டங்கள் நிறைந்து, பசுமையாக காணப்பட்ட பெங்களூரு, தற்போது காங்கிரீட் மயமாக மாறியுள்ளது. வானுயர்ந்த கட்டடங்கள் தலை துாக்கியுள்ளன. பசுமை மாயமாகியுள்ளது. இந்த திசையில் பார்த்தாலும், பல மாடி கட்டடங்கள், வர்த்தக மையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கண்களில் தென்படுகிறது. பெங்களூரில், ஆயிரக்கணக்கான காலியிடங்கள், வீட்டுமனைகள் உள்ளது. இவைகளின் உரிமையாளர்கள், வேறு இடத்தில் வசிக்கின்றனர். சரியான பராமரிப்பின்றி காலி நிலம், வீட்டுமனைகள் குப்பை தொட்டிகளாக மாறியுள்ளன.

இதனால் சுற்றுச்சூழல் அசுத்தமடைகிறது. நோய்கள் பரவ காரணமாகிறது. அக்கம், பக்கத்தினர் பாதிப்படைகின்றனர். இவற்றின் உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும் பயனில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில், கோரமங்களா 1வது பிளாக்கின், மக்கள் நலச்சங்கத்தினர், புதிய திட்டம் வகுத்தனர். 4வது பிரதான சாலை, 2வது 3வது கிராசில், 60க்கு, 40 சதுர அடி, காலியிடத்தின் உரிமையாளரின், மனதை மாற்றி, அந்த தோட்டம் அமைத்து, சுற்றுப்புற சூழ்நிலைக்கு, புதுப்பொலிவை ஏற்படுத்தினர். அங்கு விழுந்து கிடந்த குப்பை, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வாழை, பப்பாளி, முருங்கை மரக்கன்றுகள், செம்பருத்தி உட்பட, வெவ்வேறு பூச்செடிகள் நட்டுள்ளனர். மக்கள் நலச்சங்கத்தினரின், இத்திட்டத்தில் பெங்களூரு மாநகராட்சியின் தோட்டக்கலைப்பிரிவு கை கோர்த்துள்ளது.

மரக்கன்றுகள், பூச்செடிகளை இலவசமாக வழங்கியுள்ளது. தோட்டத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக, கம்பி வேலியையும், மாநகராட்சியே வழங்கியுள்ளது. அக்கம், பக்கத்தினரே செடிகளுக்கு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். தோட்டத்துக்கு மாநகராட்சியின், உரம் தயாரிப்பு மையம் தலா, 20 கிலோ கொண்ட, 20 உர மூடைகளை, இலவசமாக வழங்கியுள்ளது. வார இறுதி நாட்களில், பெரியவர்கள் மட்டுமின்றி, பிள்ளைகளும் கூட விவசாயிகளாக மாறி, தோட்ட வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஊக்கமடைந்த, வெவ்வேறு லே - அவுட் மக்கள், காலியிடங்களை தோட்டங்களாக மாற்றுகின்றனர். மாநகராட்சி தோட்டக்கலைப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்டமாக மூன்று வீட்டுமனைகளுக்கு, 70 முருங்கை, 70 வாழை, தலா 40 பப்பாளி, செம்பருத்தி பூச்செடிகள் நட்டு வளர்க்கப்படும். மகசூலை கவனித்து மேலும், பல பழங்கள், பூச்செடிகள் நடப்படும்.

கோரமங்களாவில், கைத்தோட்டம் அமைக்க அங்கு வசிக்கும் நன்கொடையாளர், ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.தோட்டத்தில் விளைந்த பூக்கள், பழங்கள், காய்கறிகளை அப்பகுதியினருக்கு, விற்பனை செய்து, கிடைக்கும் பணத்தை, தோட்டத்தின் நிர்வகிப்புக்கு பயன்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில், ஆர்வமுள்ளவர்கள் காலியிடங்களில், விவசாயம் செய்கின்றனர்.

கே.ஆர்.புரம் அருகிலுள்ள, பசவநகரின் சத்யவாணி என்பவர், இரண்டு வீட்டு மனைகளில், தென்னை, மா, எலுமிச்சை, வாழை, பப்பாளி, சப்போட்டா, பலவிதமான கீரைகள், காய்கறிகள் வளர்த்து கவனத்தை ஈர்த்தார். வெவ்வேறு லே -- அவுட்களில் உள்ள, காலி வீட்டுமனைகள், இடங்களை தோட்டம் அமைக்க, அப்பகுதியினர் முன் வந்தால், மரக்கன்றுகள், உரம் கொடுத்து ஊக்கப்படுத்த, மாநகராட்சி தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X