விழுப்புரம் : விழுப்புரம் திரு.வி.க., வீதியில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த இடத்தில் சங்கரமடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் ஆராதனை விழா நடந்து வருகின்றது. அதனடிப்படையில், நேற்று ஆராதனை விழா நடந்தது.
இதையொட்டி, காலை 6:30 மணியளவில் கோ பூஜையுடன் துவங்கி, ருத்ர ஜெபம், ருத்ர ேஹாமம் உள்ளிட்டவைகள் நடந்தது.இதில், ஏராளமான வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அவரது திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மதியம் 12:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகாளை சங்கரமட மேலாளர் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியன், ஜெகதீசன், சூர்யநாராயணன் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE