திண்டிவனம் : பாறாங்கல் விழுந்ததில், பெண்ணின் கை விரல்கள் சேதமடைந்தது.
திண்டிவனம் அடுத்த காட்டுசிவரி கிராம ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பொன்னம்மாள் வயது 42 இவர் தனது கழனியில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது மேலே இருந்து பாறாங்கல் ஒன்று உருண்டு வந்து பொன்னம்மாள் இடது கையில் விழுந்தது. இதில் பொன்னம்மாளின் இடதுகை கட்டைவிரல்,ஆள்காட்டி விரல் , நடுவிரல் ஆகிய மூன்று விரல்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE