விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் கூட்ட அரங்கு பழுதுநீக்கும் பணிகளை, கண்காணிப்பு குழு தலைவர் தங்கசேகர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் தலைமை அலுவலக கட்டட முதல் தளத்தில் நிர்வாகக்குழு கூட்ட அரங்கு உள்ளது. இங்கு இடப் பற்றாக்குறை காரணமாக, பழுது நீக்கும் பணிகள் அமைச்சர் சண்முகம் ஆலோசனையின் பேரில் துவங்கப்பட்டது. 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணிகளுக்கான அனுமதியை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல அதிகாரி பிரபாகரன், நகர வங்கி துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நளினா ஆகியோர் அளித்தனர். இந்த கட்டட பணிகளை கண்காணிப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு குழு தலைவர் தங்கசேகர் தலைமையில் நகர வங்கி துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நளினா, இயக்குனர்கள் தனுசு, கலைசெல்வம், பொது மேலாளர் (பொறுப்பு) குமார் ஆகியோர் கட்டடத்தின் பணிகளை ஆய்வு செய்தனர். இங்கு, குளிர்சாதன வசதி, பால்சீலிங், கிரானைட் பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் முடிவடைந்து, அமைச்சர் சண்முகம் மூலம் திறந்து வைக்கப்படும் என குழு தலைவர் தங்கசேகர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE