சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி மதுபானம் கடத்திய இருவர் கைது

Added : ஜன 11, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த சு.கல்லிப்பாடியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டி.எஸ்.பி., ராஜூ உத்தரவையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம், மணலுார் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன்,

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த சு.கல்லிப்பாடியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டி.எஸ்.பி., ராஜூ உத்தரவையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம், மணலுார் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, செல்வம், தலைமை காவலர்கள் காதர்கான், ஜேம்ஸ் ஆகியோர் நேற்று காலை 8:00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 26 பாக்ஸ் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு ரூ.3.5 லட்சம்.இது குறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி, 38; சடையன் மகன் ஏழுமலை, 55; ஆகியோரை கைது செய்தனர். தப்பிச் சென்ற வடகரைத்தாழனுாரைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜிவ்காந்தி, 35; தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X