தமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை : டிரெண்ட் ஆனது கிரிக்கெட்| Dinamalar

தமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை : டிரெண்ட் ஆனது கிரிக்கெட்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (24)
Share
சிட்னி :இந்தியா - ஆஸ்திரேலியான இடையேயான கிரிக்கெட் போட்டி தான் டுவிட்டர் டிரெண்டிங்கில் அதிகம் ஆக்கிரமித்தது. அதிலும் விஹாரியிடம் அஸ்வின் தமிழில் ஆலோசனை வழங்கியது, பைனிடம் இந்தியாவிற்கு வந்து பார் என கூறிய வீடியோ காட்சிகள் டுவிட்டர் வாசிகளை பெரிதும் கவர்ந்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின்
Ashwin, Ashanna, CometoIndia, IndiavsAustralia, IndvsAus,

சிட்னி :இந்தியா - ஆஸ்திரேலியான இடையேயான கிரிக்கெட் போட்டி தான் டுவிட்டர் டிரெண்டிங்கில் அதிகம் ஆக்கிரமித்தது. அதிலும் விஹாரியிடம் அஸ்வின் தமிழில் ஆலோசனை வழங்கியது, பைனிடம் இந்தியாவிற்கு வந்து பார் என கூறிய வீடியோ காட்சிகள் டுவிட்டர் வாசிகளை பெரிதும் கவர்ந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338, 312 ரன்கள் எடுத்தது. இந்தியா 244 ரன்கள் எடுத்தன. 407 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. கடைசிநாளான இன்று(ஜன., 11) இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்ததது. இதனால் 3வது போட்டி டிராவில் முடிந்தது.

இன்றைய போட்டியில் பன்ட் (97), புஜாரா (77) சிறப்பாக விளையாடி இருந்தாலும் இந்திய அணியின் விக்கெட்டை மேலும் சரியாமல் விஹாரி (23ரன், 161 பந்த), அஷ்வின் (39 ரன், 128 பந்து) தற்காத்தனர். இதனால் விஹாரி, அஷ்வினும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளமான டுவிட்டரில் இந்தியா - ஆஸ்திரேலியான கிரிக்கெட் போட்டி தொடர்பான ஹேஷ்டாக்குகள் தான் அதிகம் டிரெண்ட் ஆகின. #TeamIndia, #TestCricket, #IndianTeam, #WellDone, #WellPlayed, #IndiavsAustralia, #IndvsAus உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.


latest tamil news
அதிலும் அஸ்வினுக்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது பெயரில் #Ashwin, #Ashanna, #CometoIndia, போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. போட்டியின் போது அஷ்வின், சக வீரர் விஹாரியிடம் தமிழில் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக #Tamil என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதேப்போன்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் டிம் பெயின், ஏதோ கூற அதற்கு அஷ்வின் ''இந்தியாவிற்கு வா அது உனது கடைசி சீரிஸாக இருக்கும்'' என பதில் கொடுத்த வீடியோவும் டுவிட்டரை ஆக்கிரமித்தன. இதனால் #CometoIndia என்ற ஹேஷ்டாக்கும் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இதுதவிர்த்து ரிஷாப் பன்ட் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸிமித் பேட்ஸ்மேனின் கிரிஸில் நிற்கும் போது வைக்கும் பேட்டிங் கார்ட்டை அழிக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. இதனால் ஸ்மித்திற்கு எதிரான கருத்துக்களையும் டுவிட்டரில் அதிகம் காண முடிந்தது.

மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜன. 15ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X