ஸ்ரீமுஷ்ணம் : கள்ளிப்பாடி செல்லும் சாலையில் புதிய பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கள்ளிப்பாடி செல்லும் சாலையில் கீழ்புளியங்குடி பகுதியில் குன்னத்தேரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளை வாய்க்கால் வழியாக நகரப்பாடி ஏரிக்கு செல்கிறது.இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டு கட்டப்பட்ட பாலம் துார்ந்துள்ளது. தற்போது பெய்த கன மழை காரணமாக ஏரியில் இருந்து வெளியேறிய அதிகப்படியான தண்ணீரால், பாழடைந்திருந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது.இந்த சாலையை பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். வரும் மழை காலங்களில் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது பாலம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு, சாலை துண்டிக்கப்படும் அபாயம்ஏற்படும்.எனவே, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில், சேதமடைந்துள்ள வாய்க்கால் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE