கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாலை யோரம் கொட்டப் படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகா தார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் சாலை கே.ஏ.கே., நகர் பகுதியில் ரேஷன் கடை அருகே சாலையோரத்திலேயே குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகளின் அக்கறையின்மையால் அப்பகுதிகளில் எங்கும், குப்பைத்தொட்டிகள் வைத்து பராமரிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் சூழ்ந்து கிடக்கிறது. இது நாய்கள் மற்றும் பன்றிகளின் கூடாரமாக மாறி அங்கு மேய்ந்து வருகின்றன.
மேலும் குவிந்துள்ள குப்பைகளிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அங்கு வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே நகராட்சி அதிகாரி கள் அவ்விடத்தில் குப்பை தொட்டிகளை வைத்து சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE