வடலுார் சபையில் பூங்கா: அமைச்சர் சம்பத் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடலுார் சபையில் பூங்கா: அமைச்சர் சம்பத் திறப்பு

Added : ஜன 11, 2021
Share
வடலுார் : வடலுார் சபையை சுற்றி அமைக்கப்பட்ட புல்வெளி பூங்காவை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.வடலுார், சத்திய ஞான சபையை சுற்றி, சுற்றுச்சுவருடன் கூடிய புதிய புல்வெளி பூங்கா, என்.எல்.சி., நிறுவன சி.எஸ்.ஆர்., நிதி ரூ.35.90 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் சம்பத், பூங்காவை திறந்து வைத்து, பேசியதாவது;சபையை சுற்றி வேலியுடன் கூடிய

வடலுார் : வடலுார் சபையை சுற்றி அமைக்கப்பட்ட புல்வெளி பூங்காவை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.வடலுார், சத்திய ஞான சபையை சுற்றி, சுற்றுச்சுவருடன் கூடிய புதிய புல்வெளி பூங்கா, என்.எல்.சி., நிறுவன சி.எஸ்.ஆர்., நிதி ரூ.35.90 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் சம்பத், பூங்காவை திறந்து வைத்து, பேசியதாவது;சபையை சுற்றி வேலியுடன் கூடிய இந்த பூங்கா அமைப்பதற்கு, என்.எல்.சி., நிறுவனம், நிதி கொடுத்துள்ளதற்கு நன்றி. இந்த பங்களிப்பு போதாது. வடலுார், சபை பெரிய வளர்ச்சி அடைய வேண்டும். வடலுார் சுற்றுலா தளமாக மாற வேண்டும். அதற்காக என்.எல்.சி.,யிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இன்றைய இளைஞர்களின் மணக்கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. தியானம் செய்தால் எண்ணங்களை மேம்படுத்தலாம். வடலுார் சபையில் ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் மண்டபம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை நிச்சயம் மேற்கொள்வேன். வள்ளலாரின் புகழ் உலகளாவியது. லண்டனில் கூட ஞான சபை நிறுவி சன்மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். அங்கே சென்றபோது அதனை பார்த்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் மாவட்ட ஜெ., பேரவை செயலர் காமராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X