கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதி யில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெருவாரியான ஏரிகளும் நிரம்பி உள்ளது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால், கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி, உபரி நீர் பாசன வாய்க்கால்களிலும், ஆறுகளி லும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அத்துடன் கனமழைக் காலங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பயிர்களை துவம் சம் செய்வதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
தொடர்ச்சியான மழை பொழிவு காரணமாக மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரிகளும் தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது. பல ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த பல்வேறு ஏரிகளிலும் தற்போது தண்ணீர் நிரம்பி இருப்பது இப்பகுதி விவசாயிகளுக்கு அடுத்தடுத்த விவசாய பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அதன்படி கள்ளக்குறிச்சி தென்கீரனுார் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுவது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ந்து வருவது இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE