மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலை பள்ளம், படுகுழியாக மாறியுள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றது.
கடலுார் - சேலம், தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், மந்தாரக்குப்பம் பகுதியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இவ்வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோயமுத்துார், மதுரை, திருச்சி, சேலம், விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், மந்தாரக்குப்பம், வடக்குவெள்ளுர், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், சேப்ளாநத்தம் பகுதிகளில் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம், படுகுழிகளாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இவ்வழியே வேகமாக செல்லும் வாகனங்கள், சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி, அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன.இதற்கிடையே அந்தந்த பகுதி மக்கள் சாலைப் பள்ளத்தை செங்கல், மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்திருந்தனர்.சமீபத்தில் பெய்த கனமழைக்கு அவை அடித்துச் செல்லப்பட்டு, நெடுகிலும் மெகா சைஸ் பள்ளங்களாக மாறிவிட்டன. இதனால், இப்பகுதியில் வாகன விபத்துக்கள் தொடர்கின்றன.எனவே, மந்தாரக்குப்பம் பகுதியில் சோதமடைந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE