கடலுார் : கடலுார் பீச் ரோட்டில் செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மழைநீர் வடிகாலில் சிக்கி, கவிழ்ந்து.
கடலுாரில் நேற்று காலை முதுநகர் கண்ணாரப்பேட்டையில் இருந்து டிப்பர் லாரி ஒன்று செம்மண் ஏற்றிக்கொண்டு பீச் ரோடு வழியாக வண்ணாரப்பாளையம் சென்று கொண்டிருந்தது.வழியில் ராமலிங்க அடிகளார் சபை அருகே டிரைவர் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது மழைநீர் வடிகால் சிலாப் மீது லாரி ஏறியபோது, சிலாப் உடைந்து லாரி கவிழ்ந்தது.அதனால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி காரும் சேதமானது. உடனே டிப்பர் லாரி டிரைவர் குதித்து தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE