பொது செய்தி

தமிழ்நாடு

'கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் பிப்., 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்'

Added : ஜன 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: ''கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வரும், பிப்.,2 முதல் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில செயலாளர் செல்வம் கூறினார்.தர்மபுரியில், இதுகுறித்து அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், மூன்றறை லட்சம் ஊழியர்கள் எவ்வித பதவி உயர்வு, பணி நன்மைகள் இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு கூலி முறை ஒழிக்கப்பட்டு,

தர்மபுரி: ''கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வரும், பிப்.,2 முதல் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில செயலாளர் செல்வம் கூறினார்.


தர்மபுரியில், இதுகுறித்து அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், மூன்றறை லட்சம் ஊழியர்கள் எவ்வித பதவி உயர்வு, பணி நன்மைகள் இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு கூலி முறை ஒழிக்கப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள, நான்கரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது, அரசு ஊழியர், ஆசிரியர்கள் என, 5,068 பேரின் மீதான நடவடிக்கையை நடவடிக்கை திரும்ப பெற வேண்டும். 'டி' மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்கியது போல், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு ஊழியர்களுக்கும், போனஸ் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 12ம் வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கமும், மதுரையில், 27ல் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடக்கவுள்ளது. பிப்.,2 முதல் மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி, சிறை நிரப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில தலைவர் அன் பரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X