கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அடுத்த கருவாயன்கொட்டாயை சேர்ந்தவர் சிவன், 36. மொபைல்போன் கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் களப்பனஅள்ளியை சேர்ந்த செந்தாமரை, 31; இருவரும் நேற்று முன்தினம் காலை, 9:20 மணிக்கு தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கள்ளுக்கடை என்ற இடத்தில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த டேங்கர் லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த சிவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செந்தாமரையை அங்கிருந்தவர்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE