கரூர்: திருக்குறள் பேரவையின், 35வது ஆண்டு விழா செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில், நகரத்தார் சங்க கட்டடத்தில் நடந்தது. தமிழகத்தில் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். புதிய திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைத்து நிறைவேற்ற வேண்டும். கரூர் நகராட்சி புதிய கட்டடத்துக்கு, முன்னாள் தலைவர் பெத்தாட்சி பெயரை வைக்க வேண்டும். கரூரில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, விரிவான பஸ் ஸ்டாண்ட் மற்றும் வட்டச் சாலை, மேம்பாலம் வசதிகளை செய்ய வேண்டும். பொங்கல் பரிசில் திருக்குறளை இடம் பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை தலைவர் தங்கராசு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, 10க்கும் மேற்பட்டவர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE